டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமான நிலைக்கு சென்றுள்ளது: ஒன்றிய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்

டெல்லி: டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமான நிலைக்கு சென்றுள்ளது என்று ஒன்றிய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்றின் தரம் மிகவும் மோசமாக உள்ள நிலையில் மக்கள் மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய மாசு மற்றும் கட்டுப்பாட்டு வாரியத்தின் (CPCB) கூற்றுப்படி, தலைநகர் டெல்லியில் இன்று காலை 7:30 மணி வரை, சராசரி காற்றின் தரக் குறியீடு 328 ஆக இருந்தது. டெல்லி NCR நகரான ஃபரிதாபாத்தில் 206 ஆகவும், குருகிராமில் 195 ஆகவும், காஜியாபாத்தில் 252 ஆகவும், கிரேட்டர் நொய்டாவில் 248 ஆகவும், நொய்டாவில் 267 ஆகவும் இருந்தது.

தலைநகர் டெல்லியின் பெரும்பாலான பகுதிகளில், காற்றின் தரக் குறியீடு அளவு 300 முதல் 400 வரை பதிவாகியுள்ளது. இதில் அலிபூரில் 335, ஆனந்த் விஹாரில் 357, அசோக் விஹாரில் 361, ஆயா நகரில் 336, பவானாவில் 367, புராரி கிராசிங்கில் 362, டாக்டர் கர்னி சிங் ஷூட்டிங் ரேஞ்சில் 334, துவாரகா செக்டார் 8ல் 331, ஐஜிஐ 316, ஐடிஓவில் 316, ஜஹாங்கிர்புரியில் 366, லோதி சாலையில் 307 மற்றும் மேஜர் தியான் சந்த் ஸ்டேடியத்தில் 348 பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவை தவிர, மந்திர் மார்க்கில் 341, முண்ட்காவில் 366, நஜஃப்கரில் 325, வடக்கு வளாகத்தில் 323, பட்பர்கஞ்சில் 337, பஞ்சாபி பாக் 358, புஷாவில் 321, ஆர்.கே.புரத்தில் 362, எஸ்.எஸ்.பூரில் 356, ஷாதிபூரில் 304, கோட்டை 337, சோனியா விஹாரில் 364, அரவிந்தோ மார்க்கில் 320 மற்றும் வஜீர்பூரில் 362.

டெல்லியின் ஏழு பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு அளவு 200 முதல் 300 வரை பதிவாகியுள்ளது. இதில், சாந்தினி சவுக்கில் AQI 237, டிடியுவில் 275, தில்ஷாத் கார்டனில் 226, ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் 287, லோதி சாலையில் 286, நரேலாவில் 298, NSIT துவாரகாவில் 286 ஆக இருந்தது.

நேற்று காற்றின் தரக் குறியீடு மிகவும் மோசமான நிலையில் இருந்தது, காலையில் வானத்தில் மூடுபனியும் காணப்பட்டது. மத்திய மாசு மற்றும் கட்டுப்பாட்டு வாரியத்தின் (CPCB) கூற்றுப்படி, டெல்லியில் நேற்று காலை 7:30 மணி வரை சராசரி காற்றின் தரக் குறியீடு 352 ஆக பதிவாகியுள்ளது.

The post டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமான நிலைக்கு சென்றுள்ளது: ஒன்றிய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் appeared first on Dinakaran.

Related Stories: