மராட்டிய சட்டமன்றத் தேர்தல்: காங்கிரஸ் கட்சியின் 2வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

டெல்லி: மராட்டிய சட்டமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணியில் உள்ள சமாஜ்வாதி, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதாலா தெரிவித்து இருக்கிறார். மராட்டிய சட்டமன்றத் தேர்தலில் மகா விகாஷ் அகாதி கூட்டணியில் உள்ள காங்கிரஸ் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளும் தலா 85 தொகுதிகளில் போட்டியிட போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், எஞ்சியுள்ள 33 தொகுதிகள் எந்தந்த கூட்டணி கட்சிகளை ஒதுக்கப்படும் என கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து சமாஜ்வாதி, மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள அனைத்து கட்சிகளுக்கும் உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்படும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதாலா தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் முதற்கட்ட பட்டியலில் 45 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்ட நிலையில், 23 பேர் கொண்ட 2வது கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி தற்போது வெளியிட்டுள்ளது. இதனிடையே மராட்டியம் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடப்போவது இல்லை என்றும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிக்க போவதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது.

The post மராட்டிய சட்டமன்றத் தேர்தல்: காங்கிரஸ் கட்சியின் 2வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு appeared first on Dinakaran.

Related Stories: