சிஆர்பிஎப் வீரர்கள் பயிற்சி நிறைவு விழா பார்வையாளர்களை கவர்ந்த சாகச நிகழ்ச்சிகள்

பெ.நா.பாளையம்: கோவை அருகே கதிர்நாயக்கன்பாளையத்தில் சிஆர்பிஎப் வீரர்கள் பயிற்சி நிறைவு விழா நேற்று நடைபெற்றது. கோவை துடியலூர் அடுத்த கதிர்நாயக்கன்பாளையத்தில் உள்ள சிஆர்பிஎப் பயிற்சி கல்லூரியில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து தேர்வு செய்யப்படும் வீரர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.

கடந்த 2023 நவம்பர் முதல் 133 வீரர்களுக்கு அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர்கள் மூலம் ஒழுக்கம், அறிவு, திறமை மற்றும் அணுகுமுறை போன்ற மேம்பட்ட பயிற்சிகளும், பயங்கரவாதம் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு முறைகள் பற்றிய விழிப்புணர்வு பாடத்திட்டங்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், உரிமைகள், கல்வி, சமூக விழிப்புணர்வு, மத சம்பந்தமான காரணங்கள், பாலினம் தெளிவுகள், மொழியியல் பின்னணி, உணர்திறன் மிக்க குண்டு வீச்சு, அணுக்கதிர் வீச்சு, வேதியியல் விழைவு, இயற்கை மற்றும் செயற்கை அழிவுகளில் கதிர் வீச்சால் உண்டாகும் பாதிப்புகளை கட்டுப்படுத்துவதற்கான முறையான பயிற்சி பெற்றனர்.

இதில், 96வது பிரிவு பி-அணியில் நேரடியாக பயிற்சி பெற்ற சப்-இன்ஸ்பெக்டர்கள் (சப்-ஆர்டினெட் ஆபீசர்ஸ்) பயிற்சி நிறைவு விழா நேற்று நடைபெற்றது. இதில், பயிற்சி கல்லூரி முதல்வர் மற்றும் ஐ.ஜி வெங்கடேஷ் கலந்து கொண்டு பயிற்சி முடித்த 7 பெண்கள் உட்பட 133 வீரர்களுக்கு சப்-ஆர்டினெட் ஆபீசர் பேட்ஜ் மற்றும் சான்றிதழ் வழங்கினார். இதில், ரேங்க் அடிப்படையில் சிறந்த விளங்கிய பெஸ்ட் ஆல் ரவுண்டர் மற்றும் பெஸ்ட் பிஒஏசி வெங்கடபிரபாகர், பெஸ்ட் இன் இண்டோர் திருஷ்லா தோமர், பெஸ்ட் இன் அவுட்டோர் ஹரிராம் சிங், பெஸ்ட் இன் பயர் பாரத் ஆகிய 4 வீரர்களுக்கு கோப்பைகளை வழங்கினார்.

இதைத்தொடர்ந்து, வீரர்களின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஜூனியர் பெண் சப்-இன்ஸ்பெக்டர்களின் கேரளா நடனம், கமாண்டோ வீரர்களின் யோகா, மல்லர் கம்பத்தில் ஏறி சாகசம், ஓடு உடைத்தல் உள்ளிட்ட பல்வேறு சாகச நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது. இதில் கமாண்டன்ட் ஆண்டனி ஜென்சன், அதிகாரிகள், வீரர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். பயிற்சி முடித்த சப்-இன்ஸ்பெக்டர்களுடன் அதிகாரிகள் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இதை தொடர்ந்து பெற்றோர்கள் மற்றும் அவரது உறவினர்கள் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கான 2 ஸ்டார் முத்திரையை வீரர்களின் சட்டையில் அணிவித்து மகிழ்ந்தனர்.

The post சிஆர்பிஎப் வீரர்கள் பயிற்சி நிறைவு விழா பார்வையாளர்களை கவர்ந்த சாகச நிகழ்ச்சிகள் appeared first on Dinakaran.

Related Stories: