சென்னை: எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தல் ஜூரம் வந்துவிட்டதால் ஏதேதோ உளறி வருகிறார் என அமைச்சர் ராஜேந்திரன் விமர்சனம் செய்துள்ளார். எடப்பாடி பழனிசாமியின் சொந்த தொகுதியில் இருந்து மட்டும் 3,000 கோரிக்கை மனுக்கள் வந்துள்ளன. எடப்பாடி பழனிசாமி பேசுவது பற்றி எல்லாம் நாங்கள் கவலைப்படுவதில்லை என அமைச்சர் ராஜேந்திரன் தெரிவித்தார்.