குன்னூர் : குன்னூர் யானை பள்ளம் பழங்குடியினர் கிராமத்தில் துருப்பிடித்து, அங்கன்வாடி மையத்தின் மேல் விழும் நிலையில் உள்ள மின் கம்பத்தை மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே யானைபள்ளம் என்னும் பழங்குடியினர்கள் வசிக்கும் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் சுமார் 20 க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் அங்கன்வாடி மையத்திற்கு அருகேயுள்ள மின் கம்பம் சீரமைப்பு இல்லாததால், துருப்பிடித்து, இடையில் துளையுடன் உள்ளது. இந்த கம்பம் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் அங்கன்வாடி மையத்தின் மேல் உடைந்து விழும் தருவாயில் உள்ளது. எனவே அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் இந்த மின் கம்பத்தை மாற்றித்தர வேண்டுமென்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post குன்னூர் யானை பள்ளம் பழங்குடியினர் கிராமத்தில் துருப்பிடித்த மின் கம்பம் appeared first on Dinakaran.