மக்களவை தொகுதியை குறைத்தால் ஒன்றிய அரசிடம் போராட வேண்டும்: ராமதாஸ் பேட்டி

திண்டிவனம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று அளித்த பேட்டி: தீபாவளிக்கு முன்னும் பின்னும் 3 நாட்களுக்கு மதுக்கடைகளை மூடவேண்டும். 1500 மனமகிழ் மன்றங்களின் உரிமைகளை உடனடியாக ரத்து செய்யவேண்டும். ஆந்திராவில் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்களுக்கு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு என தகவல் வெளியாகியுள்ளது. மக்கள் தொகை குறைப்புக்காக மக்களவை தொகுதியை குறைத்தால் ஒன்றிய அரசிடம் போராட வேண்டும். தமிழகத்தில் மக்கள் தொகை கட்டுப்பாட்டு முறை இப்போது உள்ளபடியே இருக்க வேண்டும். தனியார் நிறுவனங்களில் 80 சதவீத வேலை வாய்ப்பை தமிழர்களுக்கு வழங்க வேண்டும் என்ற சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

The post மக்களவை தொகுதியை குறைத்தால் ஒன்றிய அரசிடம் போராட வேண்டும்: ராமதாஸ் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: