இன்றைய பட்டமளிப்பு விழாவில் 5,371 மருத்துவ மாணவர்களும், பல் மருத்துவத்தில் 1,485 மாணவர்களும், இந்திய மருத்துவத்தில் 2,055 மாணவர்களும், செவிலியர் மருந்தியல் இயன்முறை மருத்துவம் உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த துணைப் படிப்புகளில் 26,882 மாணவர்களும் என மொத்தம் 35,793 மாணவர்கள் பட்டங்களை பெற்றனர். 25 மாணவர்கள் பி.எச்.டி பட்டமும், பல்கலைக்கழக அளவில் அதிக மதிப்பெண் பெற்ற 96 நபர் என மொத்தம் 142 பதக்கம் வென்றவர்கள் ஆளுநரிடம் விருது பெற்றனர். 57 தங்கப்பதக்கம், 18 வெள்ளிப்பதக்கம், அறக்கட்டளை சான்றிதழ் 27 மாணவர்களுக்கும், பல்கலைக்கழகம் சார்பில் 40 பேரும் என மொத்தம் 142 விருது வழங்கப்பட்டது. இதில் ஸ்டான்லி மருத்துவ கல்லூரி மாணவர் ஸ்ரீராம் ஆனந்த் 9 பதக்கங்களும், சென்னை மருத்துவ கல்லூரி மாணவர் சுர்கித் நந்தா 7 விருதுகளும் பெற்றனர்.
The post தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவை புறக்கணித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்: ஆளுநர் பட்டங்களை வழங்கினார் appeared first on Dinakaran.