டாப்சிலிப்பில் இருந்து 5 யானைகள் மானாம்பள்ளி முகாமிற்கு மாற்றம்

வால்பாறை:வால்பாறை மானாம்பள்ளியில் யானைகள் முகாம் மீண்டும் செயல்படத் துவங்கி உள்ளது. முகாமில் 5 யானைகள் உள்ளது. ஆனைமலை புலிகள் காப்பகம், உலாந்தி (டாப்சிலிப்) வனச்சரகத்தில் கும்கி யானைகள் உட்பட 26 யானைகள் வனத்துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது.கடந்த ஏப்ரல் மாதம் தண்ணீர் மற்றும் இயற்கை தீவனம் பற்றாக்குறையால் அங்கு பராமரிக்கப்பட்ட 26 வளர்ப்பு யானைகளை, 4 முகாம்களுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்பட்டது.

வால்பாறையை அடுத்த மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட மானாம்பள்ளி பவர்ஹவுஸ் பகுதியில் செயல்பட்டு வந் முகாமில் 5 யானைகள் பராமரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் ஜூன் மாதம் முதல் பெய்த தென்மேற்கு பருவ மழையால் வனங்கள் செழிப்படைந்து, சிற்றோடைகள்,ஆறுகள் மற்றும் அருவிகளில் நீர் வரத்து அதிகரித்த பின் யானைகள் மீண்டும் மாற்று பகுதிகளில் இருந்து திரும்பி டாப்சிலிப் கொண்டு செல்லப்பட்டது.

இந்நிலையில் தற்போது கோழிகமுத்தி முகாமானது ரூ.5 கோடி மதிப்பீட்டில் இயற்கை சூழலுக்கு ஏற்றவாறு சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.இதில் யானை பாகன்கள் குடியிருப்பும் அடங்கும். பராமரிப்பு மற்றும் கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் நிலையில்,யானைகளை கையாள்வதிலும், பணியாளர்கள் தங்க வைப்பதில் சிக்கல் நீடிப்பதால் யானைகள் டாப்சிலிப் பகுதியில் இருந்து மாற்றப்பட்டு உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

இதுகுறித்து மானாம்பள்ளி வனச்சரகர் கிரிதரன் கூறுகையில்:மாற்று முகாம்களில் இருந்து கொண்டு வரப்பட்ட யானைகள் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது. உரிய இடைவேளையில் யானைகளை மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர் என்றார்.

The post டாப்சிலிப்பில் இருந்து 5 யானைகள் மானாம்பள்ளி முகாமிற்கு மாற்றம் appeared first on Dinakaran.

Related Stories: