ஆனாலும், சொந்தக் கட்சியிலேயே ட்ரூடோவுக்கு எதிர்ப்பு வலுத்துள்ளது. அவருக்கு எதிராக 20 எம்பிக்கள் போர்க்கொடி தூக்கி உள்ளதாக கூறப்படுகிறது. லிபரல் கட்சியின் 3 எம்பிக்கள் ட்ரூடோ பதவி விலக வேண்டுமென கையெழுத்திட்டிருப்பதாக வெளிப்படையாக கூறி உள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக முடிவு எடுப்பதற்கான லிபரல் கட்சியின் முக்கிய கூட்டம் புதன் கிழமை (நேற்று) நடப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதில் அனைத்து அமைச்சர்களும் ட்ரூடோவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் ட்ரூடோ பதவிக்கு எந்த ஆபத்தும் வராது என துணை பிரதமர் ப்ரீலாண்ட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
The post சொந்த கட்சி எம்பிக்கள் அதிருப்தி கனடா பிரதமருக்கு அமைச்சர்கள் ஆதரவு: பதவிக்கு ஆபத்தில்லை appeared first on Dinakaran.