மனநலம் காக்கும் உணவுகள்!

நன்றி குங்குமம் டாக்டர்

உணவுக்கும், மனதுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. மூளை செயல்படுவதற்கான ஆற்றல் உணவிலிருந்துதான் கிடைக்கிறது. மனநலன் என்பது உணர்வுகள். உளவியல், சமூகநலம் ஆகிய மூன்று அம்சங்களால் சொல்லப்படுகிறது. உணவுப் பழக்கமும், மனநலமும் ஒன்றுடன் ஒன்று சம்பந்தப்பட்டது. உடலுக்கு சத்தான சரிவிகித உணவு தேவை. அது மனநலனோடு தொடர்பு படுத்தப்படுகிறது. மூளைக்கு ஆற்றல் தேவை. இந்த ஆற்றல் உணவிலிருந்துதான் கிடைக்கிறது. எனவே சரிவிகித உணவை எடுத்துக் கொண்டால், ஆற்றல் மூளையை நேர்மறையாக சிந்திக்க வைக்கிறது.

மூளையின் செயல்திறன் இதனால் அதிகரிக்கிறது. மனநலம் என்பது மூளை, வயிறு, செரிமான உறுப்புகளோடு தொடர்புடையது. பலருக்கு இனிப்பு பண்டங்கள் சாப்பிடப் பிடிக்கும். வேறு சிலரோ துரித உணவுகளை விரும்புவர். இனிப்பான உணவுகள் கொழுப்பை சுரக்கின்றன. அதனால் மூளையில் சுரப்பிகளின் சுரப்பு அதிகரிக்கிறது. அதிக கொழுப்புள்ள உணவுகளை உண்ணும்போது கார்டிகோஸ்டீரோன் என்ற சுரப்பி சுரக்கிறது. இது பதற்றம், மன அழுத்தத்தோடு தொடர்புடைய சுரப்பியாகும். ஆகவே கொழுப்பான உணவுகள் மூளையைப் பாதிக்கின்றன. அதிகமான இனிப்புகள் மூளையின் செயல்பாட்டை குறைத்து, மனபதற்றத்தை அதிகரிக்கும். இனிப்புகள் மூளையின் செயல்பாட்டை குறைத்து, மந்தத்தன்மையை ஏற்படுத்தும்.

உணவுக்கு பின் மது அருந்துவது மனபதற்றத்தை அதிகரிக்கும். இனிப்புகள் அதிகம் சாப்பிடுவோருக்கு கவனக்குறைவு நோய் உள்ளிட்ட பிரச்னைகள் உண்டாகலாம். நல்ல உணவு உடலுக்கும், மூளைக்கும் அமைதியைத் தந்து, பதற்றத்தைக் குறைக்கும். உயிர்சத்து சி உள்ள எலுமிச்சை, கொய்யா, நெல்லிக்காய், ஆரஞ்சு, குடைமிளகாய், பெர்ரி வகை பழங்கள் போன்றவை மன அழுத்தத்தைக் குறைக்கும். பாலில் உள்ள புரதச் சத்துக்கள் ரத்த அழுத்தத்தையும் அது தொடர்பான சுரப்பிகளையும் கட்டுக்குள் வைத்திருக்கும்.

மாவுச் சத்துள்ள பொருட்கள் மூளையின் செரடோனின் சுரப்பியை சுரந்து உணர்வுகளை மகிழ்ச்சியாக்குகின்றன. டார்க் சாக்லேட் உணர்வுகளை மகிழ்ச்சிபடுத்தும், உயிர்ச்சத்து டி குறையும்போது மனச்சோர்வு ஏற்படும். உடல் எடையை குறைக்க உணவை குறைக்கும்போது சோர்வும், மனபதற்றமும் உண்டாகும். சரியாக சமைக்காத உணவுகள் ஆற்றலைக் குறைத்து மன அழுத்தத்தை குறைக்கும். போடமைன், செரடோனின், எண்டார்பின் மகிழ்ச்சி சுரப்பிகள் உணவுகளிலிருந்து பெறப்பட்டு உணர்வுகளை மேம்படுத்தும்.

நிறைய நார்ச்சத்து உள்ள உணவுகள் மலச்சிக்கல், வயிறு உபாதைகளை குறைக்கும் உடல் ஆரோக்கியமாக இருக்க உதவும். உடல் ஆரோக்கியமாக இருந்தாலே மனம் அமைதியாக நலமுடன் இருக்கும். சமச்சீரான உணவு, சரியான சமயத்தில் உணவு உட்கொள்ளல் போன்றவற்றை பழகிட மனநலம் மேம்படும்.

தொகுப்பு: மகாலட்சுமி சுப்ரமணியன்

The post மனநலம் காக்கும் உணவுகள்! appeared first on Dinakaran.

Related Stories: