தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பஸ்களில் 3 மடங்கு கட்டணம் உயர்வு: பயணிகள் கடும் அதிர்ச்சி

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பஸ்களில் 3 மடங்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு வழக்கமான கட்டணம் ரூ.585 முதல் ரூ.1,200 வரைதான். ஆனால் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வருகிற 29ம் தேதி ரூ.2,110 முதல் ரூ.4,350 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் கோவைக்கு ரூ.800 முதல் ரூ.1,040தான். ஆனால் 29ம் தேதி ரூ.1,800 முதல் ரூ.3,470 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மதுரை, திருச்சி, ஈரோடு, சேலம், திண்டுக்கல் உள்பட அனைத்து நகரங்களுக்கும் வழக்கத்தைவிட 3 மடங்கு மேல் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டணத்தை பார்த்து பயணிகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பண்டிகை காலத்தை பயன்படுத்தி ஆம்னி பஸ்களில் 3 மடங்குக்கு மேல் கட்டணம் வசூலிப்பது என்பது வழக்கமாகி விட்டது. அவ்வாறு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பஸ்கள் பறிமுதல் செய்யப்படும். உரிமம் ரத்து செய்யப்படும் என்று அரசும் எச்சரித்து வருகிறது. ஆனாலும் இந்த கட்டண உயர்வு பண்டிகை காலங்களில் தடுக்க முடியாததாகவே இருந்து வருகிறது. இதனால் அரசு இதில் தலையிட்டு அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

The post தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பஸ்களில் 3 மடங்கு கட்டணம் உயர்வு: பயணிகள் கடும் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: