உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பெண்களுக்கு கோலப்போட்டி

திருவள்ளூர்: உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை 47 நாட்கள் தொடர் நிகழ்ச்சிகளாக நடத்துவதை முன்னிட்டு 9வது நாளாக இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் வி.ஜெ.உமாமகேஸ்வரன் ஏற்பாட்டில் கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் துணை முதலமைச்சரும், மாநில இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 47 நாட்கள் தொடர் நிகழ்ச்சிகள் தொடக்க விழா கடந்த 14ம் தேதி நடைபெற்றது.

இதனை முன்னிட்டு முதல் நாள் விழாவில் தமிழ்நாடு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சரும், மாவட்ட செயலாளருமான ஆவடி சா.மு.நாசர், பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி ஆகியோர் புல்லரம்பாக்கம் கிராமத்தில் இரவு படிப்பகத்தை திறந்து வைத்தனர். 2ம் நாள் சிறந்த ஆட்டோ ஓட்டுநர்களுக்கு பரிசுகளும், 3ம் நாள் தூய்மை பணியாளர்களுக்கு ரெயின் கோட்டுகளும், 4ம் நாள் பெண்களுக்கு புடவைகளும் வழங்கினர்.

இந்நிலையில் புல்லரம்பாக்கம் கிராமத்தில் 7வது நாள் தொடர் நிகழ்ச்சியாக பெண்களுக்கான கோலப் போட்டிகள் நடத்தப்பட்டது. அப்போது மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வி.ஜெ.உமா மகேஸ்வரன் தலைமையிலான குழுவினர் சிறந்த கோலத்தை தேர்வு செய்து பரிசுகள் வழங்கினர். மேலும் 8 வது நாள் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடைகளும், 9 வது நாள் ஏழை, எளியவர்களுக்கு இலவச மருத்துவ முகாமும் நடைபெற்றது.

The post உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பெண்களுக்கு கோலப்போட்டி appeared first on Dinakaran.

Related Stories: