ஆவின் டிலைட் பால் உற்பத்தி நிறுத்தப்பட்டதாகப் பரவும் தகவல் தவறானது: உண்மை சரிபார்ப்பகம் விளக்கம்

சென்னை: ஆவின் டிலைட் பால் உற்பத்தி நிறுத்தப்பட்டதாகப் பரவும் தகவல் தவறானது என உண்மை சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது. சோழிங்கநல்லூரில் உள்ள ஆவின் தொழிற்சாலையில் பேரிடர் காலங்களில் மக்களுக்கு பெரிதும் பயன்பட்டு வந்த 90 நாட்கள் கெடாத பாலின் உற்பத்தி நிறுத்தம்’ என்று செய்திகளில் வெளியாகி வெளியானது.

இந்நிலையில் இது குறித்து விளக்கம் அளித்த தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பகம்; ’90 நாட்கள் வரை கெடாத ஆவின் UHT பால் (டிலைட்) உற்பத்தி நிறுத்தப்படவில்லை. கடந்த இரு மாதங்களில் 10 ஆயிரம் UHT பால் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 40 ஆயிரம் UHT பால் பாக்கெட்டுகள் கையிருப்பு உள்ளது. ஆவின் UHT பால் நிறுத்தம் எனும் செய்தி முற்றிலும் தவறானது’ என்று ஆவின் விளக்கமளித்துள்ளது. ஆவினின் 90 நாட்கள் கெடாத UHT பாலை டிலைட் எனக் குறிப்பிட்டு இருந்தோம். அது Nice UHT Treated Toned Milk என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது என்று தெரிவித்துள்ளது.

The post ஆவின் டிலைட் பால் உற்பத்தி நிறுத்தப்பட்டதாகப் பரவும் தகவல் தவறானது: உண்மை சரிபார்ப்பகம் விளக்கம் appeared first on Dinakaran.

Related Stories: