வெள்ளகோவில் அருகே கைத்தறி ரக ஒதுக்கீடு குறித்து விசைத்தறி உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு

 

வெள்ளக்கோவில், டிச.20: வெள்ளக்கோவில் அருகே உள்ள தீர்த்தாம்பாளையத்தில் விசைத்தறி உரிமையாளர்களுக்கு கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டம் குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. தீர்த்தம்பாளையம் ஊர் தலைவர் பாஸ்கர் தலைமை வகித்து வரவேற்றார். ஈரோடு தேர்வு நிலை இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் அமலாக்க ஆய்வாளர் ஜெகதீசன் கலந்து கொண்டு பேசியதாவது, கைத்தறிக்கு என ஒதுக்கப்பட்டு அதில் சில விதிமுறைகளுக்கு உட்பட்ட சேலை வேஷ்டி டவல் லுங்கி பெட்சிட் ஜமக்காலம் டிரஸ் மெட்டீரியல் கம்பளி சால்வை உல்லன் ஸ்வீட் சந்தார் ஆகிய 11 ரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்யக்கூடாது.

மீறி சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் விசைத்தறி உரிமையாளர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். மத்திய அரசின் நலத்திட்டம் தொடர்பாக ஈரோடு கைத்தறி அலுவலர் சங்கீதா பேசினர். மாநில அரசின் நலத்திட்டம் மற்றும் தொழிலாளர்கள் நல வாரியம் தொடர்பாக ஈரோடு கைத்தறி அலுவலர் அமலாக்க ஆய்வாளர் தேவி தெரிவித்தார். திருத்தம்பாளையம் ஊர் செயலாளர் வஜ்ரவேல் நன்றி கூறினர்.

The post வெள்ளகோவில் அருகே கைத்தறி ரக ஒதுக்கீடு குறித்து விசைத்தறி உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Related Stories: