மகாராஷ்டிரா பேரவை தேர்தல்: பாஜ முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு: சிட்டிங் எம்எல்ஏக்கள் 71 பேருக்கு மீண்டும் வாய்ப்பு

மும்பை: மகாராஷ்டிரா சட்ட பேரவை தேர்தலையொட்டி 99 வேட்பாளர்கள் அடங்கிய முதல் வேட்பாளர் பட்டியலை பாஜ நேற்று வெளியிட்டது. கடந்த முறை வெற்றி பெற்ற 71 பேருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா பேரவைக்கு நவம்பர் 20ம் தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் ஆளும் பாஜ கூட்டணிக்கும், காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. பாஜவும் அதன் கூட்டணிகட்சிகளும் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.பாஜ கட்சி 150 இடங்கள் போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில்,99 இடங்களுக்கான முதல் வேட்பாளர் பட்டியலை பாஜ நேற்று வெளியிட்டது. இதில், துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ்.மாநில தலைவர் சந்திரசேகர் பவன்குலே,சபாநாயகர் ராகுல் நர்வேகர் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். வேட்பாளர்களில் 71 பேர் தற்போதைய எம்எல்ஏக்கள் ஆவர்.பட்னாவிஸ் நாக்பூர் தெற்கு,ராகுல் நர்வேக்கர் கொலபா,சந்திரசேகர் பவன்குலே காம்தி தொகுதியிலும் நிறுத்தப்பட்டுள்ளனர்.

மக்களவை தேர்தலுக்கு முன்னர் காங்கிரசில் இருந்து விலகிய முன்னாள் முதல்வர் அசோக் சவானின் மகள் ஜயா சவானுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.மும்பை சயான் கோலிவாடாவின் தற்போதைய எம்எல்ஏவும் தமிழருமான கேப்டன் தமிழ் செல்வன் போட்டியிடுகிறார். இவர் ஏற்கனவே 2 முறை எம்எல்ஏவாக இருந்துள்ளார்.

The post மகாராஷ்டிரா பேரவை தேர்தல்: பாஜ முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு: சிட்டிங் எம்எல்ஏக்கள் 71 பேருக்கு மீண்டும் வாய்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: