தொடர் உண்ணாவிரதம் கொல்கத்தா மருத்துவர்களிடம் முதல்வர் மம்தா பேச்சு

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் பலாத்கார கொலை சம்பவத்துக்கு நீதி கேட்டு ஜூனியர் மருத்துவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உண்ணாவிரதப்போராட்டம் இருந்த 6 மருத்துவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 8 மருத்துவர்கள் தற்போது உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் மருத்துவர்கள் போராட்டம் நடத்தும் இடத்தை உள்துறை செயலர் நந்தினி சக்ரபோர்த்தி நேற்று நேரில் சென்று பார்வையிட்டார். இதனை தொடர்ந்து முதல்வர் மம்தா பானர்ஜி காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களிடம் தொலைபேசி மூலமாக பேசினார். அப்போது முதல்வர் மம்தா, ‘‘ உங்களது பெரும்பாலான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. மீதமுள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற 4 மாதங்கள் அவகாசம் தாருங்கள்” என்றார்.

The post தொடர் உண்ணாவிரதம் கொல்கத்தா மருத்துவர்களிடம் முதல்வர் மம்தா பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: