ராஜீவ்காந்தியை இழிவாக பேசிய வழக்கு: விக்கிரவாண்டி கோர்ட்டில் சீமான் ஆஜர்


விக்கிரவாண்டி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை இழிவாக பேசிய வழக்கில் விக்கிரவாண்டி கோர்ட்டில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று ஆஜர் ஆனார். கடந்த 2019ம் ஆண்டு தேர்தலின்போது விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நேமூர் கிராமத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியை பற்றி இழிவாக பேசியதாக கூறி காங்கிரஸ் மாவட்ட தலைவர் ரமேஷ் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில் இந்த வழக்கு இன்று விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜர் ஆனார்.

இதன் காரணமாக விக்கிரவாண்டி நீதிமன்றம் பரபரப்பாக காணப்பட்டது. இதற்கிடையே இன்று விக்கிரவாண்டியில் நாம் தமிழர் கட்சி செயல்வீரர் கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் சீமான் பங்கேற்க உள்ளார். நாம் தமிழர் கட்சியில் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளராக இருந்த சுகுமார், மேற்கு மாவட்ட செயலாளர் பூபாலன், விழுப்புரம் மாவட்ட மேற்கு தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர் சுதன்ராஜ் ஆகியோர் அடுத்தடுத்து கட்சியில் இருந்து விலகியதால் விழுப்புரத்தில் நாம் தமிழர் கட்சி கூடாரம் காலியாகி விட்டது. இது போன்ற சூழ்நிலையில் செயல்வீரர்கள் கூட்டம் நடப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post ராஜீவ்காந்தியை இழிவாக பேசிய வழக்கு: விக்கிரவாண்டி கோர்ட்டில் சீமான் ஆஜர் appeared first on Dinakaran.

Related Stories: