திருவிதாங்கோடு மகான் மாலிக் முஹம்மது சாஹிப் ஒலியுல்லாஹ் ஆண்டு விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

குமாரபுரம், அக்.18: குமரி மாவட்டம் திருவிதாங்கோடு மகான் மாலிக் முஹம்மது சாஹிப் ஒலியுல்லாஹ் ஆண்டு விழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. வருகிற 25ம் தேதி வரை தினசரி இரவு மனிதர்களின் வாழ்க்கை வரலாறு பற்றி பயான் நிகழ்ச்சிகள் நடைபெறும். நேற்று அழகிய மண்டபம் புகாரி பள்ளிவாசலில் இருந்து மாலை மக்ரிப் தொழுகை முடிந்ததும் 6.30 மணிக்கு கொடி ஊர்வலம் தொடங்கி திருவிதாங்கோடு மகான் மாலிக் முஹம்மது சாஹிப் ஒலியுல்லாஹ் பள்ளிவாசல் வந்து சேர்ந்தது. பின்னர் பள்ளி வளாகத்தில் கொடியை ஏற்றி வைக்கப்பட்டு நேர்ச்சை வழங்கப்பட்டது. 25 தேதி இரவு வரை தினமும் மார்க்க அறிஞர்களின் இஸ்லாமிய அறநெறிகள், மார்க்க சட்டங்கள், நீதி போதனைகள், மகானின் வரலாறு ஆகியவை குறித்து சிறப்புரையாற்றுவார்கள். திருவிதாங்கோடு முஸ்லிம் ஜமாத் செயலாளர் முகம்மது யூசுப், தலைவர் அன்வர் உசேன், துணைத் தலைவர் அப்துல் பாத்தாஹ், துணைச் செயலாளர் மாலிக் முகம்மது, திருவிதாங்கோடு முஸ்லிம் ஜமாத் தலைமை இமாம் சுல்பீக்கர் அலி ஜலாலி, பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post திருவிதாங்கோடு மகான் மாலிக் முஹம்மது சாஹிப் ஒலியுல்லாஹ் ஆண்டு விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது appeared first on Dinakaran.

Related Stories: