அமெரிக்காவிடமிருந்து 31 நவீன டிரோன்களை வாங்க இந்தியா ஒப்பந்தம்: ரூ.33 ஆயிரம் கோடி செலவு

புதுடெல்லி: இந்தியாவின் போர் வலிமையை அதிகரிக்கும் வகையில், அமெரிக்காவிடம் இருந்து எம்க்யூ-9பி பிரிடேட்டர் டிரோன்களை வாங்க பாதுகாப்பு அமைச்சகம் கடந்த ஆண்டு ஜூனில் ஒப்புதல் அளித்தது. இதற்கு கடந்த வாரம் ஒன்றிய அமைச்சரவையும் ஒப்புதல் வழங்கியது. இதைத் தொடர்ந்து, ரூ.33 ஆயிரம் கோடி செலவில் அமெரிக்காவிடம் இருந்து 31 பிரிடேட்டர் ரக டிரோன்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. அமெரிக்காவின் அட்டாமிக்ஸ் நிறுவனம் டிரோன்களை தயாரித்து வழங்குகிறது.

மொத்தம் 31 டிரோன்ளில் கடற்படைக்கு 15 கடல் பாதுகாப்பு டிரோன்களும், இந்திய விமானப்படை, தரைப்படைக்கு தலா 8 வான் பாதுகாப்பு டிரோன்களும் வழங்கப்படும்.  இந்த டிரோன்கள் வானில் மிக உயரத்தில் 35 மணி நேரத்துக்கும் அதிகமாக பறக்கக் கூடியது. மேலும் 450 கிராம் வெடிகுண்டுகள் ஆகியவற்றையும் எடுத்துச் செல்ல முடியும்.

The post அமெரிக்காவிடமிருந்து 31 நவீன டிரோன்களை வாங்க இந்தியா ஒப்பந்தம்: ரூ.33 ஆயிரம் கோடி செலவு appeared first on Dinakaran.

Related Stories: