ஒரு சிலர்களுக்கு குடியிருக்க முறையாக வீடுகள் இல்லாமல் உள்ளது. கூரைகளுக்கு பிளாஸ்டிக் விரித்து தங்கள் குடியிருப்புகளை பராமரித்து வருகின்றனர். மேடான பகுதி என்பதால் மழைக்காலங்களில் வழுக்கள் ஏற்பட்டு ஒரு குடியிருப்பில் இருந்து மற்றொரு குடியிருப்புக்கு செல்ல முடியாமல் இறந்தவர்களை மயானத்திற்கு சுமந்து செல்வதற்கும் நடைபாதை வசதிகள் இல்லாமல் மிகவும் சிரமப்படுகின்றனர்.
அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் எந்தவித நடவடிக்கையும் இல்லாததால் மக்கள் அதிருப்தியில் இருந்து வருகின்றனர். எனவே இப்பகுதிக்கு ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் தாட்கோ திட்டங்கள் மூலம் நிதி ஒதுக்கீடு செய்து கிராமத்தை தத்தெடுத்து அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post பந்தலூர் இன்கோ நகர் பகுதிக்கு அடிப்படை வசதிகள் நிறைவேற்ற தர கோரிக்கை appeared first on Dinakaran.