சென்னை: நியாயவிலை கடைகளில் பொதுமக்களுக்கு துவரம் பருப்பை தட்டுப்பாடின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். ஒப்பந்தம் வழங்கிய நிறுவனங்களிடம் இருந்து தமிழ்நாடு அரசு உரிய துவரம் பருப்பை கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.