அரியலூர் அருகே வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

 

அரியலூர்: அரியலூர் அருகே வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம் ஜெயங்கொண்டம் மேலக்குடியிருப்பில் வசிப்பவர் விக்னேஷ் (எ) விக்கி, (22) இவர் மீது அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் காவல் நிலையங்களில் பல்வேறு அடிதடி, கொலை முயற்சி வழக்குகள் உள்ளன.

இந்நிலையில் 23.09.2024-ம் தேதி அரியலூர் தவுத்தாய்க்குளம் மதுக்கடையின் மதுக்கூடத்தில் தகராறு செய்து தன்னுடன் வந்த ஒருவரைத் பாட்டிலை உடைத்து தாக்கியதோடு மதுக்கூட உரிமையாளரைத் தாக்கி அங்கிருந்த பொருட்களை உடைத்து மிரட்டியுள்ளார். இது தொடர்பாக அரியலூர் காவல் நிலையத்தில் வழக்குகள் பதிவு செய்து, கைது செய்யப்பட்டு அரியலூர் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் சிறையில் இருந்து வெளியே வந்தால் பொது ஒழுங்கு மற்றும் பொது அமைதிக்கு பாதகமான நடவடிக்கையில் ஈடுபடுவார் என்பதால் அவர் மீது குண்டர் சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கக்கோரி, அரியலூர் காவல் நிலைய ஆய்வாளர் சந்திரமோகன் கோரியதன் அடிப்படையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் மேல் பரிந்துரையை ஏற்று, அரியலூர் மாவட்ட கலெக்டர் இரத்தினசாமி, விக்கி மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் படி தடுப்புக்காவலில் அடைக்க ஆணை பிறப்பித்து, அதன் அடிப்படையில் நேற்று குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

The post அரியலூர் அருகே வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது appeared first on Dinakaran.

Related Stories: