ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறையில் நலத்திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் கீழ் இயங்கி வரும் மாணவ, மாணவியர் விடுதிகளில் குடிநீர் சுத்திகரிக்கும் கருவிகள் பொருத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால் ஒவ்வொரு வருடமும் மத்திய அரசிடமிருந்து ஆதிதிராவிடர் மக்களுக்கு வரும் மத்திய நிதியை முழுமையாக செலவிடாமல், பெரும்பாலான நிதியை திருப்பி அனுப்புதல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடப்பதாக அறிகிறேன்.

குறிப்பாக, பழங்குடியினர் நலத் துறையில், ‘தொல்குடி’ என்ற திட்டத்தின்கீழ் பழங்குடியின மக்களுக்கான மேம்பாட்டு வசதிகளுக்கு ஒதுக்கப்படும் நூற்றுக்கணக்கான கோடி ரூபாயில், பல பணிகளை செய்யாமலேயே, செய்ததாகச் முறைகேடுகளில் ஈடுபடுவதாகச் செய்திகள் வருகின்றன. முறைகேடுகளை தடுக்காமல் வேடிக்கை பார்ப்பதற்கு கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இனியாவது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கான நலத் திட்டங்களை உடனடியாக செயல்படுத்திட அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறையில் நலத்திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: