ஜி.எஸ்.டி வரி பகிர்வில் தென் மாநிலங்களை ஒன்றிய அரசு வஞ்சித்துள்ளதாக குற்றசாட்டு..!!

சென்னை: ஜி.எஸ்.டி வரி பகிர்வில் தென் மாநிலங்களை ஒன்றிய அரசு வஞ்சித்துள்ளதாக குற்றசாட்டுகள் எழுந்துள்ளன. செப்டம்பரில் மாநிலங்கள் வசூலித்து கொடுத்த ஜி.எஸ்.டி மற்றும் ஒன்றிய அரசு அளித்த வரிப்பகிர்வின் ஒப்பீடு செய்யப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு வரி வருவாயிலிருந்து மாநிலஅரசுகளுக்கான வரி பகிர்வாக ரூ. 1.78. லட்சம் கோடி ரூபாயை விடுவித்துள்ளது. இந்த வரி பகிர்வில் மிக பெரிய அளவில் பாரபட்சம் இருப்பதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்திற்கு ரூ.31,962 கோடியை ஒன்றிய அரசு வரி பகிர்வாக விடுவித்துள்ளது. இந்த தொகையானது தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, கேரளா ஆகிய 5 தென் மாநிலங்களுக்கான வரி பகிர்வின் மொத்த தொகையையும் விட கூடுதலாகும். இந்த 5 தென் மாநிலங்கள் மொத்த நிதியில் 15.8 சதவீதம் பெற்றனர். அதே சமயம் உத்தரப்பிரதேசத்திற்கு மட்டும் 17.9 சதவீத நிதியை ஒன்றிய அரசு வழங்கியுள்ளது.

இதன் மூலம் வரி பங்கீட்டில் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டிலிருந்து கடந்த செப்டம்பர் ரூ.11,024 ஜி.எஸ்.டி வசூலான நிலையில் வரி பகிர்வில் வெறும் ரூ.7,268 கோடி மட்டுமே ஒன்றிய அரசு விடுவித்துள்ளது. கர்நாடகாவில் ரூ.12,642 கோடி ஜி.எஸ்.டி வசூலான நிலையில் ரூ.6,498 கோடி வழங்கியது. அதே நேரத்தில் ரூ.8,057 கோடி ஜி.எஸ்.டி வசூல் செய்த உத்தர பிரதேசத்திற்கு ரூ.31,962 கோடியும்.

ரூ.3,929 கோடி ஜி.எஸ்.டி வசூல் செய்த ராஜஸ்தானுக்கு ரூ.10,737 கோடியும், ரூ.1,497 கோடி ஜி.எஸ்.டி வசூல் செய்த பீகாருக்கு ரூ.17,921 கோடியும் வரி பகிர்வாக ஒன்றிய அரசு அள்ளிக்கொடுத்துள்ளது. ரூ.5167 கோடி ஜி.எஸ்.டி வசூல் செய்த மேற்கு வங்கத்திற்கு ரூ.13,404 கோடியும். ரூ.3,095 கோடி ஜி.எஸ்.டி வசூல் செய்த மத்திய பிரதேசத்திற்கு ரூ.13, 987 கோடி ரூபாயையும் ஒன்றிய அரசு விடுவித்தது தெரியவந்துள்ளது.

 

The post ஜி.எஸ்.டி வரி பகிர்வில் தென் மாநிலங்களை ஒன்றிய அரசு வஞ்சித்துள்ளதாக குற்றசாட்டு..!! appeared first on Dinakaran.

Related Stories: