கேப்டன் ஹர்மன்பிரீத் பேட்டி: ஆஸி.க்கு எதிராக சிறப்பாக ஆட முயற்சிப்போம்

துபாய் : மகளிர் டி20 உலக கோப்பையில் இந்திய அணி நேற்று இலங்கைக்கு எதிராக மோதியது. ஏற்கனவே நியுசிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி தோற்றிருந்ததால் இந்த போட்டி வாழ்வா? சாவா? ஆட்டமாகும். ஆனால் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய மகளிர் அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. குறிப்பாக இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 27 பந்துகளில் 52 ரன்கள் விளாசியது வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இதன் மூலம் இந்திய மகளிர் அணி அதிக ரன்ரேட்டுடன் புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்தது.

இதுகுறித்து இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கூறுகையில், “பாகிஸ்தானுக்கு எதிராக பெற்ற வெற்றியை இந்த போட்டியிலும் தொடர வேண்டும் என்று நினைத்தோம். அதற்கேற்றார் போல் தொடக்க வீராங்கனைகள் ஷபாலி வர்மா மற்றும் ஸ்மிருதி மந்தனா இருவரும் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். தொடக்கத்தில் அவர்கள் விக்கெட்டை இழக்காமல் பார்த்துக் கொண்டதாலேயே, இந்த வெற்றி சாத்தியமானது. நல்ல கிரிக்கெட் ஆடும்போது மனதளவில் மகிழ்ச்சியாக இருக்கும். அத்தகைய சூழல் இன்று எங்களுக்கு அமைந்தது. அரையிறுதிக்கு முன்னேற ரன் ரேட் மிகவும் முக்கியம் என்பதை நன்கு அறிந்துள்ளோம். எனவே ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்போம்’’ என்றார்.

The post கேப்டன் ஹர்மன்பிரீத் பேட்டி: ஆஸி.க்கு எதிராக சிறப்பாக ஆட முயற்சிப்போம் appeared first on Dinakaran.

Related Stories: