பந்தலூர் அருகே முறையான கழிப்பறை இல்லாமல் டேன்டீ தொழிலாளர்கள் அவதி

பந்தலூர் : பந்தலூர் அருகே முறையான கழிப்பறைகள் இல்லாமல் டேன்டீ தொழிலாளர் அவதிப்பட்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டம், பந்தலூர் மற்றும் கூடலூர் சுற்றுவட்டாரம் பகுதிகளில் தேவாலா, பாண்டியார்,சேரம்பாடி, நெல்லியாளம், சேரங்கோடு, கொளப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய மக்களுக்காக அரசு தேயிலைத்தோட்டம் டேன்டீ உருவாக்கப்பட்டு பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். இந்த தொழிலாளர்களுக்கு கடந்த 40 ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்ட குடியிருப்புகள் மற்றும் குடியிருப்புகளில் இருந்து தொலைவில் கட்டப்பட்டுள்ள கழிப்பறைகள் தற்போது பழுதடைந்து தொழிலாளர்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

இந்நிலையில் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் தொலைவில் உள்ள கழிப்பறைகளை பயன்படுத்துவதற்கு இரவு நேரங்களில் தொழிலாளர்கள் செல்லும்போது மனித – வன விலங்குகள் மோதல் ஏற்பட்டு அசம்பாவிதம் ஏற்படுகின்றது. அதனால் டேன்டீ தேயிலை தோட்டத்தொழிலாளர்களுக்கு குடியிருப்பையொட்டி கழிப்பறைகள் கட்டுவதற்கு டேன்டீ நிர்வாகமும் தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பந்தலூர் அருகே முறையான கழிப்பறை இல்லாமல் டேன்டீ தொழிலாளர்கள் அவதி appeared first on Dinakaran.

Related Stories: