தொழில் முனைவோர் ஓராண்டு சான்றிதழ் படிப்பு

 

கோவை, அக். 10: கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் அகமதாபாத் நிறுவனத்துடன் இணைந்து ‘‘தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்கம்’’ என்ற தலைப்பில் ஓராண்டு சான்றிதழ் படிப்பை தொடங்க உள்ளது. இதற்கான வகுப்புகள் வருகிற 14ம் தேதி துவங்கும். இந்த பாட திட்டத்திற்கு ஆண்டுக்கு ரூ. 80 ஆயிரம் கட்டணமாக அரசு நிர்ணயித்துள்ளது. 21 வயது முதல் 40 வயதுக்குட்பட்ட பட்டதாரிகள் இந்த பயிற்சியில் சேர்ந்து பயனடையலாம்.

இது ஒரு தொழில் முனைவோர் சான்றிதழ் படிப்பாகும். வேலைவாய்ப்புக்கான படிப்பு அல்ல. எனவே ஒவ்வொரு மாவட்டத்திலும் தொழில்முனைவோராக மாற முயற்சிப்பவர்களுக்கு இது ஒரு வாய்ப்பாக அமையும். இது குறித்த விவரங்களுக்கு 8668107552, 8668101638 மற்றும் 8072799983 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். மேலும் https://youtube.com/shorts/GBnEEtTQiul?feature=share என்ற இணைய தளத்திலும் காணலாம். இவ்வாறு கலெக்டர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.

The post தொழில் முனைவோர் ஓராண்டு சான்றிதழ் படிப்பு appeared first on Dinakaran.

Related Stories: