இந்த போட்டியில் அபாரமாக விளையாடிய ஹர்திக், பேட்டிங்கில் 39 ரன்கள் எடுத்ததுடன், பந்துவீச்சில் 1 விக்கெட்டையும் கைப்பற்றினார். தனது அபார ஆட்டத்தின் மூலம் அணிக்கு வெற்றியைத் தேடித்தந்த பாண்டியா தற்போது டி20 ஆல்ரவுண்டர் தரவரிசைப் பட்டியலில் 4 இடங்கள் முன்னேறி 3வது இடத்தைப் பிடித்துள்ளார்.
வங்கதேசத்துக்கு எதிரான எஞ்சிய 2 போட்டிகளிலும் ஹர்திக் பாண்டியா தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினால் அவர் ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் பட்டியலில் நம்பர் 1 இடத்திற்கு முன்னேற வாய்ப்புள்ளது
தரவரிசையில் பட்டியலில் 253 புள்ளிகளுடன் இங்கிலாந்து அணி வீரர் லியாம் லிவிங்ஸ்டன் முதலிடத்திலும், 235 புள்ளிகளுடன் நேபால் அணி வீர திபேந்திர சிங் ஐரி இரண்டாவது இடத்திலும், 216 புள்ளிகளுடன் ஹர்திக் பாண்டியா மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
வங்கதேசத்துக்கு எதிராக விளையாடிய 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் செயல்பட்ட ரவீந்திர ஜடேஜா டெஸ்ட் ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். ஜடேஜா 468 புள்ளிகளுடன் முதலிடத்திலும், அஷ்வின் 358 புள்ளிகளுடன் 2வது இடத்திலும் உள்ளனர். வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சாளர் தரவரிசையில் 870 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார்.
The post ஐசிசி டி20 ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறினார் ஹர்திக் பாண்டியா appeared first on Dinakaran.