2024ம் ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசு புதுவகையான புரதத்தை கண்டறிந்ததற்காக 3 பேருக்கு பகிர்ந்தளிப்பு!!

ஸ்டாக்ஹோம்: 2024ம் ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசு அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த அறிவியலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்வீடன் நாட்டை சேர்ந்த அறிவியலாளர் ஆல்பிரட் நோபல் நோபல் பரிசை நிறுவினார். அதன்படி மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசுகள் கடந்த 1901ம் ஆண்டிலிருந்து வழங்கப்பட்டு வருகின்றன. 2024ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் தொடர்பான அறிவிப்பு நேற்று முன்தினம்(7ம் தேதி) முதல் வௌியாகி வருகிறது. திங்களன்று அமெரிக்காவை சேர்ந்த இருவருக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. நேற்று அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த அறிவியலாளர்களுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் 2024ம் ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசு இன்று வௌியானது. அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் பேக்கர், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த டெமிஸ் ஹசாபிஸ், ஜான் ஜம்பர் ஆகியோருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. புதுவகையான புரதத்தை கண்டறிந்ததற்காக 3 பேருக்கும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புரதங்களின் கட்டமைப்பை கண்டறியும் வழியை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். தங்க பதக்கத்துடன் கூடிய ரூ.8.39 கோடி பரிசு தொகையை உள்ளடக்கிய நோபல் விருதுகள் விருதை நிறுவிய ஆல்பிரட் நோபல் நினைவு தினமான டிசம்பர் 10ம் தேதி ஸ்டாக்ஹோமில் நடைபெறும் விழாவில் வழங்கப்படும்.

The post 2024ம் ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசு புதுவகையான புரதத்தை கண்டறிந்ததற்காக 3 பேருக்கு பகிர்ந்தளிப்பு!! appeared first on Dinakaran.

Related Stories: