மன்னார்குடி உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு மரக்கன்றுகள் உருவாக்க பயிற்சி

 

மன்னார்குடி,அக். 9: மன்னார்குடி அரசு உதவிபெறும் மணிமேகலை நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு மரக்கன்றுகள் உருவாக்குவது பற்றிய பயிற்சி நடந்தது. இதுகுறித்து ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ், ஆசிரியர் ஜெகதீஷ் பாபு கூறியது: மன்னார்குடி நிதியுதவி பெறும் மணிமேகலை நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு மரக்கன்று விதைகள் மற்றும் பைகளை வழங்கப்பட்டன. விதைகள் நட்டு வளர்ப்பதற்காக மணல் மற்றும் இயற்கை உரங்களை எந்த விகிதத்தில் கலந்து விதைகளை எவ்வாறு பைகளில் அடைத்து வளர்க்க வேண்டும் என்றும், அதை வளர்த்து, பொது இடங்களில் நட்டு வளர்ப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்ட்து. மேலும், மரக்கன்றுகளை நட்டு வளர்ப்பதால், சுற்றுச்சூழல் மேம்பாடு அடைந்து, உயிர்களுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், புங்கன் விதைகள், இயற்கை உரம், விதை பைகள் கொண்டு பைகளில் எவ்வாறு வளர்ப்பது என்று பயிற்சி அளிக்கப் பட்டது. மரக்கன்றுகளை தங்கள் வீட்டில் சிறப்பாக வளர்த்து பராமரிக்கும் மாணவர்களுக்கு பல்நோக்கு சேவை இயக்கத்தின் சார்பில் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்றனர்.

The post மன்னார்குடி உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு மரக்கன்றுகள் உருவாக்க பயிற்சி appeared first on Dinakaran.

Related Stories: