பொன்னமராவதி சோழீஸ்வரர் கோயிலில் திருவாசகம் முற்றோதல்

பொன்னமராவதி,டிச.8: பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத சோழீஸ்வரர் கோயிலில் திருவாசகம் முற்றோதல் நடந்தது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத ராஜாராஜா சோழீஸ்வரர் கோயிலில் திருவாசகம் முற்றொதல் குழு சார்பில் கார்த்திகை மாத வழிபாட்டை முன்னிட்டு கோயில் வளாகத்தில் சிறப்பு திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சியை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.

காலை 9மணி முதல் மாலை 4.30 மணி வரை திருவாசகம் பாடப்பட்டது. இதில் கருப்புக்குடிப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி தமிழாசியர் முருகேசன், சாந்திவெங்கட்ராமன், தெய்வானை காசிநாதன் மற்றும் திருவாசகம் முற்றோதல் குழுவினர் பங்கேற்றனர்.

 

Related Stories: