குன்னூரில் பிரபல தங்க நகைக்கடை பைன் கோல்டு தங்க நகை மாளிகை ஓராண்டு வெற்றி கொண்டாட்டம்

 

கோத்தகிரி, அக்.9: குன்னூரில் பிரபல தங்க நகைக்கடையான பைன் கோல்டு தங்க நகை மாளிகையின் ஓராண்டு வெற்றி கொண்டாடப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் பந்தலூரில் தலைமை இடமாக கொண்டு பிரபல தங்க நகை மாளிகை பைன் கோல்டு நிறுவனம் கடந்த 10 ஆண்டுகளாக மக்களின் பேராதரவை பெற்று சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இந்த நிறுவனம் நீலகிரி மாவட்டத்தில் பந்தலூர், மஞ்சூர், கோத்தகிரி, குன்னூர் உள்ளிட்ட நகர பகுதிகளில் தங்களது நிறுவனங்களை நிறுவி சிறப்பாக மக்களின் பேராதரவை பெற்று நடைபெற்று வருகிறது.
கடந்த ஆண்டு பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் நகைக்கடை தொடங்கப்பட்ட நிலையில் நேற்று குன்னூர் கிளையின் முதலாம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினர்களாக தனியார் மகளிர் கல்லூரி முதல்வர் ஷீலா, வியாபார சங்கச்செயலாளர் ரஹீம், பைன் கோல்டு தங்க நகைக்கடை‌ உரிமையாளர்களான சாஜன் ஜார்ஜ், பினோய், ஜார்ஜ், சுருதி பினோய், ஜிஷா ஷாஜன் குத்து விளக்கேற்றி முதலாம் ஆண்டு விழாவை சிறப்பித்தனர்.
மேலும் முதலாம் ஆண்டு விழாவையொட்டி வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு பரிசுகளுடன் தங்க நகை விற்பனை செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் பைன் கோல்டு நிறுவனத்தின் பொது மேலாளர் முத்துக்குமார், கிளை நிர்வாக மேலாளர்கள் லோகேஷ், மனோஜ்குமார், பேசில், செல்வம், அமல்விஷ்ணு கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

The post குன்னூரில் பிரபல தங்க நகைக்கடை பைன் கோல்டு தங்க நகை மாளிகை ஓராண்டு வெற்றி கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: