கோவை, அக்.9: தமிழ்நாடு துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின், மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அமைச்சராக பொறுப்பேற்றதையொட்டி கோவை திமுக தெற்கு மாவட்டம், தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்களின் தொமுச சார்பாக போத்தனூரில் உள்ள செயின்ட் ஜோசப் முதியோர் இல்லத்தில் திமுக தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் முதியோர்களுக்கு உணவு வழங்கினார்.
இந்நிகழ்வில் குறிச்சி தெற்கு பகுதி கழக செயலாளர் கார்த்திகேயன், குறிச்சி வடக்கு பகுதி கழக செயலாளர் காதர், பொதுக்குழு உறுப்பினர் ரகு (எ) துரைராஜ், தமிழ்நாடு கடைகள் தொமுச ஒருங்கிணைந்த மாவட்ட தலைவர் சன்கதிரவன், மாவட்ட செயலாளர் டேனியல் ஜேசுதாஸ், பொருளாளர் வசந்தராஜன், 100வது வட்ட செயலாளர் மேட்டூர் மாணிக்கம்,பொன்சுரேஷ் ஆதவன் ஆறுமுகம்ஸ்ரீதர், சிவா, கார்த்தி, வெங்கடேஸ், தனசேகரன், ரவூப் தண்டபாணி, சிவலிங்கம், நிசார், ரோலக்ஸ் ஆசிக், பொன் சுரேஷ், கலங்கல் சிவக்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
The post திமுகவின் தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவை சார்பாக முதியோர்களுக்கு உணவு வழங்கல் appeared first on Dinakaran.