தென்கிழக்கு ஆசியா ஜஸ் ஸ்கேட்டிங் போட்டி

 

தொண்டாமுத்தூர், அக்.2: பிலிப்பைன்ஸ் நாட்டின் மனிலா நகரில் தென் கிழக்கு ஆசிய ஜஸ் ஸ்கேட்டிங் போட்டி நடைபெற்றது. இதில் கோவை சின்னதடாகத்தை சேர்ந்த பிரணவ் அருண்பிரசாத இந்திய அணி சார்பில் ஜுனியர் ஏ பிரிவில் (17-19 வயது பிரிவு) கலந்துகொண்டார். அவர் தனது வயது பிரிவில் 500, 1000 மற்றும் 1500 மீட்டர் போட்டிகளில் முறையே 3ம் இடம் பிடித்து 3 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளார்.

இந்திய அணியில் தமிழகத்தில் இருந்து பங்கேற்ற ஒரே வீரர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது . இவரை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டி போட்டிகளில் பங்கேற்பதற்குண்டான ரூ.1,95,000ஐ தமிழ்நாடு அரசின் சார்பில் வழங்கினார். நேற்று கோவை திரும்பிய பிரணவ் அருண் பிரசாத்துக்கு விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

The post தென்கிழக்கு ஆசியா ஜஸ் ஸ்கேட்டிங் போட்டி appeared first on Dinakaran.

Related Stories: