சில்லி பாயின்ட்…

* டென்னி-காய்ட்: தமிழ்நாடு சாம்பியன்
ஜம்மு காஷ்மீரில் நடந்த 36வது தேசிய சப்-ஜூனியர் டென்னி-காய்ட் சாம்பியன்ஷிப் தொடரில் (செப்.30 – அக்.4), தமிழ்நாடு அணி சிறுவர், சிறுமியர் குழு போட்டி, ஒற்றையர், இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவுகளில் 22 புள்ளிகளைக் குவித்து ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. பாண்டிச்சேரி (13 புள்ளி) 2வது இடம், ஆந்திரா (12 புள்ளி) 3வது இடம் பிடித்தனர். தமிழக அணியினர் கோப்பையுடன் உற்சாகமாக போஸ் கொடுக்கின்றனர்.
* சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் அரங்கில் ஆஸ்திரேலியா யு-19 அணியுடன் நடந்து வரும் 2வது டெஸ்டில், இந்தியா யு-19 அணி முதல் இன்னிங்சில் 492 ரன் குவித்தது (133.3 ஓவர்). நித்ய பாண்டியா 94, கார்த்திகேயா 71, கேப்டன் பட்வர்தன் 63, நிகில் குமார் 61, ஹர்வன்ஷ் 117 ரன் விளாசினர். அடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா யு-19 அணி 2ம் நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 142 ரன் எடுத்துள்ளது. கேப்டன் ஆலிவர் பிகே 62 ரன், அலெக்ஸ் லீ யங் 45 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இன்று 3வது நாள் ஆட்டம் நடக்கிறது.
* முல்தானில் இங்கிலாந்து அணியுடன் நடக்கும் முதல் டெஸ்டில், பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 556 ரன் குவித்து ஆல் அவுட்டானது (அப்துல்லா 102, கேப்டன் ஷான் மசூத் 151, சல்மான் ஆஹா 104*). 2ம் நாள் முடிவில் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 1 விக்கெட் இழப்புக்கு 96 ரன் எடுத்துள்ளது. கேப்டன் ஓல்லி போப் டக் அவுட்டான நிலையில், ஜாக் கிராவ்லி 64 ரன், ஜோ ரூட் 32 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். இங்கிலாந்து இன்னும் 460 ரன் பின்தங்கியுள்ள நிலையில் இன்று 3வது நாள் சவாலை சந்திக்கிறது.
* டி20 போட்டிகளில் 2500 ரன் மைல்கல்லை விரைவாக எட்டிய 2வது வீரர் என்ற விராத் கோஹ்லியின் சாதனையை (73 போட்டி) சமன் செய்ய சூரியகுமார் யாதவுக்கு (72 போட்டி) இன்னும் 39 ரன் தேவை. வங்கதேசத்துடன் டெல்லியில் இன்று நடக்கும் 2வது போட்டியில் அவர் இந்த மைல்கல்லை எட்டுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த வரிசையில் பாகிஸ்தான் அணி முன்னாள் கேப்டன் பாபர் ஆஸம் (67 போட்டி) முதலிடத்தில் உள்ளார்.

The post சில்லி பாயின்ட்… appeared first on Dinakaran.

Related Stories: