ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் தொடர்ந்து எண்ணப்பட்டு வருகின்றன. முடிவுகள் இன்னும் முழுமையாக வெளிவரவில்லை. இருப்பினும் தற்போதைய தேர்தல் ஆணையத்தில் அதிகாரப்பூர்வ தரவுகளின் படி தேசிய மாநாட்டுக் கட்சி மற்றும் காங்கிரஸ் கூட்டணி 47 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இதில் தேசிய மாநாட்டுக்கட்சி 41 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி 6 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. அதற்கு அடுத்தபடியாக பாஜக 29 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
ஜம்மு காஷ்மீரில் ஆட்சி அமைக்க சுமார் 46 சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது. தற்போது தேசிய மாநாட்டுக்கட்சிக்கு 47 உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதால் தேசிய மாநாட்டுக்கட்சி கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதியாகவுள்ளது. தேசிய மாநாட்டுக்கட்சியின் சார்பில் யார் முதல்வராக போகிறார்கள் என்பது பெரும் கேள்வியெழுந்த சூழ்நிலையில் உமர் அப்துல்லா ஜம்மு காஷ்மீரின் முதல்வராக பதவியேற்பார் என அவரது தந்தையும், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான பரூக் அப்துல்லா அறிவித்துள்ளார்.
The post ஜம்மு காஷ்மீர் முதல்வராக உமர் அப்துல்லா பதவி ஏற்பார்: தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா அறிவிப்பு appeared first on Dinakaran.