அதுபோக , முதலமைச்சரின் அமெரிக்க பயணத்தின் போது, பன்னாட்டு தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. அந்நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இதில் ஆலோசிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுபோல் பல்வேறு திட்டங்கள் குறித்தும் இந்த ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் தலைமையில் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமைச்சரவை மாற்றத்திற்கு பிறகு, முதன் முதலாக, புதிய அமைச்சர்களான ஆர்.ராமசந்திரன், கோவி செழியன் ஆகியோர் அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். அமைச்சர்கள் செந்தில் பாலாஜி , நாசர் ஆகியோரும் நீண்ட நாட்களுக்கு பிறகு அமைச்சரவை கூட்டத்தில் இன்று பங்கேற்றுள்ளனர்.
The post முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது: முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.