நாமக்கல்லில் வருவாய் துறை சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நாமக்கல், அக்.8: விஏஓ மீதான தாக்குதலை கண்டித்து, நாமக்கல்லில் வருவாய் துறை சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல்லில், தாசில்தார் அலுவலகம் முன்பு அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வருவாய்த்துறை சார்ந்த அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நரவலூர் அக்ரஹாரம் கிராம நிர்வாக அலுவலர் ராமனை தாக்கியவர்களை கைது செய்யகோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் மாவட்ட தலைவர் சரவணன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் லட்சுமி நரசிம்மன் கோரிக்கை குறித்து பேசினார். கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட அமைப்பு செயலாளர் பிரபா, தமிழ்நாடு கிராம ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பரமசிவம், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட இணை செயலாளர் சதீஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர். கிராம நிர்வாக அலுவலர் சங்க வட்ட தலைவர் முருகேசன் நன்றி கூறினார்.

The post நாமக்கல்லில் வருவாய் துறை சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: