இந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை புரிந்த பொதுமக்கள், தங்களது குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும், பொதுபிரச்சனைகள் தொடர்பாக உதவிகள் வேண்டியும் 413 மனுக்களை வழங்கினர். இதில், நிலம் சம்பந்தமாக 118 மனுக்களும் சமூக பாதுகாப்புதிட்டம் தொடர்பாக 43 மனுக்களும் வேலைவாய்ப்பு வேண்டி 38 மனுக்களும் பசுமைவீடு, அடிப்படை வசதிகள் வேண்டி 78 மனுக்களும் மற்றும் இதர துறைகள் சார்பாக 139 மனுக்களும் என மொத்தம் 413 மனுக்கள் பெறப்பட்டது.
இந்த மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் அறிவுறுத்தினார். பின்னர் முன்னாள் படைவீரர்கள் நலத்துறை சார்பாக அதிக கொடி நாள் நிதி வசூலில் சாதனை புரிந்தமைக்காக சான்றிதழ்களை மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார்.
இந்த கூட்டத்தில் பொன்னேரி சார் ஆட்சியர் வாகே சங்கத் பல்வந்த், வருவாய் கோட்டாட்சியர்கள் திருவள்ளுர் ஏ.கற்பகம், திருத்தணி தீபா தனித் துணை ஆட்சியர் (சபாதி) வி.கணேசன், முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குநர் வெங்கடசலம் மற்றும் பல்வேறு துறை சார்ந்த உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் 413 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது appeared first on Dinakaran.