23 ஆண்டு பொது வாழ்க்கை தனித்துவ அர்ப்பணிப்பின் அடையாளம் பிரதமர் மோடி: அமித்ஷா புகழாரம்

புதுடெல்லி: குஜராத்தின் முதல்வராகவும், பிரதமராகவும் பதவி வகித்த நரேந்திர மோடி பொது வாழ்க்கையில் 23 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதையொட்டி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது: பிரதமர் மோடி முதல்வராக, பிரதமராக தனது பொது வாழ்வில் 23 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். பிரதமர் மோடியின் இந்த நீண்ட கால பொதுச் சேவை, ஒருவர் தனது முழு வாழ்க்கையையும் தேச நலனுக்காகவும் மக்கள் நலனுக்காக எப்படி அர்ப்பணிக்க முடியும் என்பதற்கான தனித்துவமான அர்ப்பணிப்பு அடையாளம்.

பொது வாழ்வில் ஈடுபடுவோருக்கு அவர் ஒரு வாழும் உத்வேகமாக திகழ்கிறார். அவரது இந்த நீண்ட பொது வாழ்க்கைக்கு சாட்சியாக, துணையாக இருப்பது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம்.
ஏழைகளின் நலன், நாட்டின் வளர்ச்சி, பாதுகாப்பு, மற்றும் இந்தியாவின் உலகளாவிய அடையாளம் என அனைத்தையும் வலுப்படுத்துவதற்கான பணிகளை எவ்வாறு ஒரே நேரத்தில் மேற்கொள்வது என்பதை மோடி காட்டி உள்ளார். நாட்டிற்கு முழுமையான 23 ஆண்டுகள் இடையறாது தேசத்திற்காகவும் மக்களுக்காகவும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு தேசத்தை கட்டியெழுப்பிய மோடியை நான் வாழ்த்துகிறேன் என்றார்.

 

The post 23 ஆண்டு பொது வாழ்க்கை தனித்துவ அர்ப்பணிப்பின் அடையாளம் பிரதமர் மோடி: அமித்ஷா புகழாரம் appeared first on Dinakaran.

Related Stories: