அரசியல் சாசனத்தை தாங்கள் பாதுகாப்போம்.. தலித் மக்கள் சமையலறை: வீடியோ வெளியிட்டார் ராகுல் காந்தி!!

மகராஷ்டிரா: பட்டியலினத்தவர் மற்றும் பிறப்படுத்தப்பட்டோருக்கு பங்களிப்பை வழங்கிய அரசியல் சாசனத்தை பாதுகாப்போம் என எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மகராஷ்டிரா மாநிலம் கோலாப்பூருக்கு சென்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பட்டியலினத்தை சேர்ந்த அஜய் துக்காராம் சனதே மற்றும் அஞ்சனா துக்காராம் சனடே ஆகியோரின் இல்லத்திற்கு சென்று இருந்தார். பட்டியலினத்தவரின் உணவு பழக்க வழக்கங்கள் பற்றி கேட்டறிந்து கலந்துரையாடிய ராகுல் காந்தி, அவருடன் இணைந்து சமையல் வேலைகளில் உதவி செய்ததோடு ஒன்றாக அமர்ந்து உணவு அருந்தினார்.

இந்நிலையில், ராகுல் காந்தி இது தொடர்பாக வீடியோ ஒன்றை சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது; இன்றும் தலித் சமூக மக்கள் சமையலறை பற்றி வெகு சிலருக்கே தெரியும். தலித் சமூக மக்கள் என்ன சாப்பிடுகிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது. அவர்கள் என்ன சாப்பிடுகிறார்கள், எப்படி சமைக்கிறார்கள் என்பதை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில், அஜய் துக்காராம் மற்றும், அஞ்சனா துக்காராம் உடன் மதிய உணவை சமைத்து சாப்பிட்டேன்.

அவரது வீட்டிற்கு என்னை மரியாதையுடன் அழைத்து, சமையலறையில் அவருக்கு உதவ எனக்கு வாய்ப்பளித்தார். நாங்கள் இருவரும் சேர்ந்து ‘ஹர்ப்யாச்சி பாஜி’ என்ற கறியை தயாரித்தோம். பட்டியலினத்தவர்களின் உணவு பழக்க வழக்கங்கள் குறித்த விழிப்புணவு குறைவாக இருப்பதாகவும், அவர்களின் கலாச்சாரத்தை ஆவணப்படுத்தபட வேண்டியதும், அவசியம் குறித்தும் கலந்துரையானேன். பட்டியலினத்தவர் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு அரசியல் சாசனம், பங்களிப்பையும் உரிமைகளையும் வழங்கி இருப்பதாக தெரிவித்த ராகுல் காந்தி, அந்த அரசியல் சாசனத்தை தாங்கள் பாதுகாப்போம் என தெரிவித்துள்ளார்.

The post அரசியல் சாசனத்தை தாங்கள் பாதுகாப்போம்.. தலித் மக்கள் சமையலறை: வீடியோ வெளியிட்டார் ராகுல் காந்தி!! appeared first on Dinakaran.

Related Stories: