பொது இடங்களில் குப்பை கொட்டினால் அபராதம்: நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை

 

பழநி, அக். 7: பொது இடங்களில் குப்பை கொட்டினால் அபராதம் விதிக்கப்படுமென பழநி நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பழநி நகரில் ஏராளமான அளவில் திருமண மண்டபங்கள், லாட்ஜ்கள், சத்திரங்கள் மற்றும் ஹோட்டல்கள் ஆகியவை உள்ளன.  இவற்றில் இருந்து அனுதினமும் ஏராளமான குப்பைகள் சாலைகளில் கொட்டப்படுகின்றன. இதனால் நகர் முழுவதும் குப்பைகள் தேங்கிக் கிடக்கின்றன.

அதற்கு பதிலாக அதனை சேமித்து நகராட்சி வாகனங்கள் வரும்போது ஒப்படைக்க வேண்டுமென நகராட்சி நிர்வாகம் சார்பில் பலமுறை அறிவுறுத்தப்பட்டுள்ளது. அறிவிப்பை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுமென நகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.  மேலும், ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் டம்ளர்கள், தட்டுகள், மேஜை விரிப்புகளை பயன்படுத்துக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

The post பொது இடங்களில் குப்பை கொட்டினால் அபராதம்: நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: