ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் சார்பில் வயநாடு பாதிப்புக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி

 

காஞ்சிபுரம், அக். 7: வயநாடு நிலச்சரிவு பாதிப்புக்கு, தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் ரூ.10 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டது. கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட கேரளத்துக்கு நிதியுதவி செய்வதென தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கம் தீர்மானித்து, நன்கொடை திரட்டி அனுப்ப மாவட்ட மையங்களுக்கு வேண்டுகோள் விடுத்தது. இதையெடுத்து, எல்லா மாவட்டங்களிலிருந்தும் வரப்பெற்ற நன்கொடை தொகையில் முதல் தவணையாக ரூ.10 லட்சத்துக்கான காசோலையை, வயநாடு மாவட்ட கலெக்டரிடம் கொடுப்பது என முடிவு எடுக்கப்பட்டது.

அதன்படி, சங்கத்தின் நிறுவன தலைவர் கே.கங்காதரன், மாநில தலைவர் ஆர்.பாலசுப்பிரமணியன், மாநில பொதுச் செயலாளர் எஸ்.மகாலிங்கம் மற்றும் மாநிலப் பொருளாளர் காஞ்சி இ.திருவேங்கடம் ஆகியோர் வயநாடு கூடுதல் கலெக்டரை நேரில் சந்தித்து காசோலையை கொடுத்தனர்.ஆய்வுக் கூட்டம் நடத்திக் கொண்டிருந்தநிலையில், ஓய்வு பெற்ற அரசு சங்கத்துக்காக நேரம் ஒதுக்கி காசோலையைப் பெற்றுக்கொண்டு நன்றி தெரிவித்துவிட்டு, பின்னர் ஆய்வுக் கூட்டத்தை தொடர்ந்து நடத்துவதற்காகச் சென்றார்.

The post ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் சார்பில் வயநாடு பாதிப்புக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி appeared first on Dinakaran.

Related Stories: