திருப்போரூர் கந்தசாமி கோயில் உண்டியலில் லட்ச ரூபாய் ஐபோன்

திருப்போரூர்: செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் கந்தசாமி கோவில் கடந்த நான்கு மாதங்களுக்கு பின்பு நேற்று உண்டியல் திறக்கப்பட்டது. இதில், பக்தர்கள் தாலி பொட்டு, கண்மலர், வேல், பண முடிப்பு, சில்லறை நாணயங்கள், கட்டு கட்டாக 500 ரூபாய் நோட்டுக்கள் என உண்டியலில் பக்தர்கள் தங்களது வேண்டுதலுக்கு ஏற்ப நிரப்பி வைத்திருந்தனர். இதில், வியக்கத்தக்க வகையில் தவறவிட்ட ஒரு செல்போனும் கிடைக்கப்பெற்றுள்ளது.அது யாருடைய செல்போன் என்று ஆய்வு மேற்கொண்டதில் சென்னை அம்பத்தூர் விநாயகபுரத்தைச் சேர்ந்த தினேஷ் சென்னை சிஎம்டிஏ நிர்வாகத்தில் பணி செய்பவரின் செல்போன் என தெரியவந்தது.

இதனை அடுத்து அவருக்கு தகவல் அளிக்கப்பட்டு அவரும் உண்டியல் என்னும் இடத்திற்கு வந்து செல்போனை பெற முயன்றபோது கோவில் நிர்வாகத்தினர் உண்டியலில் போட்ட அனைத்து பொருட்களும் முருகனுக்கே உரியது உங்களுக்கு செல்போன் கொடுக்க முடியாது. வேண்டுமென்றால் உங்களுடைய தரவுகள் ஏதேனும் செல்போனில் இருந்தால் அவற்றை மட்டும் நீங்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்தனர். குடும்பத்தினருடன் செல்போனை பெற்றுக் கொள்ளலாம் என வந்தவருக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது ஏற்கனவே இவர் சென்னையில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மனு அளித்து எனது செல்போனை மீட்டுக் கொடுக்கும்படி கேட்டு இருந்தார். அதற்கு நிர்வாக முறைப்படி நீங்கள் அங்கு மனு அளித்து மீண்டும் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்ததன் பெயரில் அவர் திரும்பி சென்றார்.

The post திருப்போரூர் கந்தசாமி கோயில் உண்டியலில் லட்ச ரூபாய் ஐபோன் appeared first on Dinakaran.

Related Stories: