இந்த, தற்செயல் விடுப்பு போராட்டத்தில் அனைத்து விதமான பணிகளையும் கணக்கில் கொண்டு ஆய்வு மேற்கொள்ளவும், மனித திறனுக்கு ஏற்ற குறியீடுகளை வரையறுக்க வேண்டும். உதவி இயக்குநர், கூடுதல் இயக்குநரின் பணிகளையும், கடமைகளையும் மண்டல துணை இயக்குநர், இணை இயக்குநர் (நிர்வாகம்), இயக்குநர் ஆகியோர்களுக்கு மாற்றும் நடவடிக்கையை கைவிட வேண்டும். சிறப்புத் திட்டங்கள் மூலம் பெறப்படும் மனுக்கள் மற்றும் பணிகளுக்கு கால நிர்ணயம் வழங்காமல் ஊழியர்கள் மீது பெரும் பணிச்சுமையை சுமத்துவதையும், நியாயமான தள்ளுபடிகளுக்கு ஆய்வு என்கிற பெயரில் ஊழியர்களை கடுமையாக நடத்துவதையும் கைவிட வேண்டும்.
மேலும், தரமிறக்கப்பட்ட குறுவட்ட அளவர் பதவியினை பெற்று, தகுதியுள்ள நில அளவர்களுக்கு பதவி உயர்வு வழங்கிடவேண்டும். சிறப்பு திட்டங்களில் நிலம் எடுப்பு பணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்களில் நில அளவை களப்பணியாளர்களை பதவி உயர்வு வழங்கிடவும், தமிழ்நாடு முழுவதும் அனைத்து துறைகளிலும் அரசாணை எண்:10ஐ கடைபிடிக்கவும், பொது மாறுதல் நடைமுறையை நில அளவை பதிவேடுகள் துறையில் மாற்றி அமைத்திட எடுக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும். நில அளவை பதிவேடுகள் துறையில் மிக முக்கியமான அடிப்படை பணியாக உள்ள புல உதவியாளர்கள் பணியிடங்களை தனியார் முகமையின் மூலம் அத்துக் கூலிக்கு நியமனம் செய்வதைகைவிட்டு கால முறை ஊதியத்தில் பணி நியமனம் செய்திட வேண்டியும், ஆய்வாளர், துணை ஆய்வாளர் ஊதிய முரண்பாட்டை களைந்திட வேண்டும்.
உதவி இயக்குநர், கூடுதல் இயக்குநரின் பணிகளையும், கடமைகளையும் மண்டல துணை இயக்குநர், இணை இயக்குநர் (நிர்வாகம்), இளக்குநர் ஆகியோர்களுக்கு மாற்றும் நடவடிக்கையை கைவிட வேண்டும். சிறப்பு திட்டங்கள் மூலம் பெறப்படும் மனுக்கள் மற்றும் பணிகளுக்கு கால நிர்ணயம் வழங்காமல் ஊழியர்கள் மீது பெரும் பணிச்சுமையை சுமத்துவதையும், நியாயமான தள்ளுபடிகளுக்கு ஆய்வு என்கிற பெயரில் ஊழியர்களை கடுமையாக நடத்துவதையும் கைவிட வேண்டும், தரமிறக்கப்பட்ட குறுவட்ட அளவர் பதவியினை பெற்று தகுதியுள்ள நில அளவர்களுக்கு பதவி உதவி உயர்வு வழங்கிட வேண்டும்.
சிறப்பு திட்டங்களில் நிலம் எடுப்பு பணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்களில் நில அளவை களப்பணியாளர்களை பதவி உயர்வு வழங்கிடவும், நில அளவை பதிவேடுகள் துறையில் மிக முக்கியமான அடிப்படை பணியாக உள்ள புல உதவியாளர்கள் பணியிடங்களை தனியார் முகமையின் மூலம் அத்துக் கூலிக்கு நியமனம் செய்வதை கைவிட்டு காலமுறை ஊதியத்தில் பணி நியமனம் செய்திட வேண்டியும், ஆய்வாளர், துணை ஆய்வாளர் ஊதிய முரண்பாட்டை களைந்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தி, தற்செயல் மற்றும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
The post பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நில அளவை அலுவலர் சங்க தற்செயல் விடுப்பு போராட்டம் appeared first on Dinakaran.