வருங்காலங்களில் நடத்தப்படும் கலை நிகழ்ச்சிகளை “குறவன் குறத்தி ஆட்டம்” என அழைக்கக் கூடாது

சென்னை: வருங்காலங்களில் நடத்தப்படும் கலை நிகழ்ச்சிகளை “குறவன் குறத்தி ஆட்டம்” என அழைக்கக் கூடாது என்றும், நிகழ்த்துக் கலைகளின்போது அப்பெயர்களில் அழைக்கப்படக் கூடாது என்றும் தமிழ்நாடு மாநில ஆதிராவியார் மற்றும் பழங்குடியினர் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

மகிழ்ச்சிக்காகவும், உற்சாகமூட்டவும் நடத்தப்படும் ஆபாசக் கலை நிகழ்ச்சிகளிலும் அப்பெயர்களைப் பயன்படுத்துவது, அப்பெயர்களிலுள்ள மக்களை மிகுந்த மன வருத்தத்திற்கும், அவமானத்திற்கும் ஆளாக்குகிறது என்பதால், இது குறித்த விழிப்புணர்வு பொதுமக்களுக்கு வேண்டும்.

ஏற்கனவே, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பட்டியலில் உள்ள ‘சண்டாளன்’ என்கிற சாதிப் பெயரைத் தவறாகப் பயன்படுத்தக் கூடாது எனத் தமிழ்நாடு அரசுக்குப் பரிந்துரை செய்தது போல, பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடி வகுப்பான ‘குறவன்’ என்கிற சாதிப் பெயரைத் தவறாகப் பயன்படுத்தி ஒலி/ஒளி பரப்பப்படும் பாடல்களைத் தடை செய்து அரசாணை பிறப்பிக்க தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம், தமிழ்நாடு அரசுக்குப் பரிந்துரை செய்கிறது.

The post வருங்காலங்களில் நடத்தப்படும் கலை நிகழ்ச்சிகளை “குறவன் குறத்தி ஆட்டம்” என அழைக்கக் கூடாது appeared first on Dinakaran.

Related Stories: