அம்மாபேட்டை அருகே செக்போஸ்டில் டெம்போ டிரைவரிடம் லஞ்சம்?

 

பவானி,அக்.4: அம்மாபேட்டை அருகே சோதனைச்சாவடியில் பணியிலிருந்த போலீஸ் டெம்போ டிரைவரிடம் பணம் கேட்டதாக எழுந்த புகாரின்பேரில் பவானி டிஎஸ்பி சந்திரசேகரன் நேற்று விசாரணை நடத்தினார். ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள ஊமாரெட்டியூர் கோவில்கரட்டைச் சேர்ந்தவர் பிரபு (25). இவர் கோனேரிப்பட்டியிலிருந்து ஒசூருக்கு மினி டெம்போவில் வாழைக்காய் பாரம் ஏற்றிக்கொண்டு சென்றார். அந்த டெம்போ சின்னப்பள்ளம் காவல் சோதனைச்சாவடி பகுதியில் நேற்று முன்தினம் இரவு வந்தது.

அப்போது சோதனைச்சாவடியில் பணியில் இருந்த அம்மாபேட்டை போலீஸ்காரர் செல்வக்குமார், டெம்போவை நிறுத்தி சோதனை செய்தார். அப்போது, டெம்போ டிரைவர் பிரபுவிடம் அவர் ரூ.2 ஆயிரம் பணம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால், இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதை வீடியோவாக எடுத்த டிரைவர் பிரபு, சமூக வலை தளங்களில் பதிவிட்டுள்ளார். இது குறித்த தகவலின் பெயரில் பவானி டிஎஸ்பி சந்திரசேகரன் சின்னப்பள்ளம் காவல் சோதனைச்சாவடியில் நேற்று விசாரணை நடத்தினார். அம்மாபேட்டை காவல் நிலையத்திலும் இது தொடர்பான விசாரணை நடைபெற்றது.

The post அம்மாபேட்டை அருகே செக்போஸ்டில் டெம்போ டிரைவரிடம் லஞ்சம்? appeared first on Dinakaran.

Related Stories: