அப்போது அவர் நின்றிருந்த மேடை திடீரென சரிந்ததால் பிரியங்கா மோகன் உட்பட மேடையில் இருந்தவர்கள் அனைவரும் கீழே விழுந்தனர். கீழே விழுந்த நடிகை பிரியங்கா மோகனை விழா ஏற்பட்டார்கள் மற்றும் போலீசார் பாதுகாப்பாக அழைத்து சென்றனர். மேலும், எதிர்பாராத இந்த விபத்தில் ஒரு சிலருக்கு பலத்த காயங்களும், நடிகை பிரியங்கா மோகனுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு சில நபர்கள் மட்டுமே நிற்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த இந்த மேடையில் அதிகளவு ஆட்கள் நின்றதே மேடை சரிந்ததற்கான காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
மேடை சரிந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் நடிகையின் நிலைமை பற்றி ரசிகர்கள் விசாரித்து வருகிறார். இந்நிலையில், லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாக நடிகை பிரியங்கா மோகன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மேடை சரிந்த விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விரும்புகிறேன். விபத்தில் சிக்கிய பின் உடல்நலம் குறித்து கேட்டறிந்த அனைவருக்கும் நன்றி என பிரியங்கா மோகன் தெரிவித்துள்ளார்.
The post தெலுங்கானாவில் மேடை சரிந்து கீழே விழுந்த நடிகை.. லேசான காயத்துடன் உயிர் தப்பினேன்: பிரியங்கா மோகன் பதிவு!! appeared first on Dinakaran.