போதிய சாலைகள் இல்லாததால், நைஜீரியாவில் படகு வழி போக்குவரத்து அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. படகுகள், கப்பல்கள் மோசமான பராமரிப்பு மற்றும் பொதுமக்களின் நெரிசல் காரணமாக அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.
இந்நிலையில் வடக்கு நைஜீரியாவில் நைஜர் ஆற்றில் மரப் படகு ஒன்று சுமார் 300 பயணிகளை ஏற்றிச் சென்றுள்ளது. 100 பேர் பயணிக்கக்கூடிய படகில் 300 பயணித்தால் படகு நீருக்குள் மூழ்கியது. படகில் பயணித்த பெண்கள், குழந்தைகள் என அனைவரும் நீருக்குள் மூழ்கினர்.
தகவலறிந்து வந்த மீட்புப்படையினர் நீரில் மூழ்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மீட்பு நடவடிக்கையில் இதுவரை 150 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர். 9 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
நைஜீரியாவின் உள்நாட்டு நீர்வழிகளில் இயக்கப்படும் படகுகளுக்கான பயணிகள் வரம்புகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட பராமரிப்பு தரங்களை கடுமையாக அமல்படுத்த வேண்டும் என்று கடல்சார் பாதுகாப்பு நிபுணர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post நைஜீரியா நாட்டில் நைஜர் ஆற்றில் படகு கவிழ்ந்து 100 பேர் உயிரிழந்ததாக தகவல் appeared first on Dinakaran.