திருப்பதி லட்டு விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு

புதுடெல்லி: திருப்பதி லட்டு விவகாரத்தை சிபிஐ அமைப்பு விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திருப்பதி லட்டுவில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக ஆந்திரா மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு வெளியிட்ட தகவல் மிகப்பெரிய சர்ச்சையாகி உள்ளது. இதுதொடர்பான விவகாரத்தில் ஒன்றிய அரசு தனது நிலைப்பாட்டை நாளைக்குள் தெரிவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் முன்னதாக உத்தரவிட்டுள்ளது.

இதுபோன்ற சூழலில் உலகளாவிய அமைதிக்கான அமைப்பின் தலைவரான கே.ஏ.பால் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், ‘‘திருப்பதி லட்டு தயாரிப்பு விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும். விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டுள்ளதாக ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் துணை முதல்வர் பவன் கல்யாண் அவசியமற்ற சர்ச்சையை கிளப்பியுள்ளனர்.

கோடிக்கணக்கான பக்தர்களை மனதில் வைத்து, ஒன்றிய அரசு திருப்பதியை யூனியன் பிரதேசமாக அறிவிக்க வேண்டும். அரசியல் சர்ச்சைகளுக்காக கடவுள்களை பயன்படுத்துவது நிறுத்தப்பட வேண்டும் என்பது மட்டுமில்லாமல், ஆந்திர மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட உச்ச நீதிமன்றம் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

The post திருப்பதி லட்டு விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு appeared first on Dinakaran.

Related Stories: